News September 19, 2025
ரீசார்ஜுக்கு தள்ளுபடி தரும் BSNL.. கட்டணம் குறைகிறது

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை BSNL அறிவித்துள்ளது. BSNL-ன் அதிகாரப்பூர்வ தளம் அல்லது மொபைல் செயலியில் இருந்து ரீசார்ஜ் செய்தால் 2% தள்ளுபடி கிடைக்கும். இது ₹199, ₹489, ₹1999 ரீசார்ஜ்களுக்கு மட்டும் பொருந்தும். 2% தள்ளுபடி என்பதால் ₹1999 ரீசார்ஜுக்கு ₹38, ₹485 ரீசார்ஜுக்கு ₹9.6, ₹199 ரீசார்ஜுக்கு ₹3.8 தள்ளுபடி கிடைக்கும். அக்.15 வரை இந்த தள்ளுபடி நடைமுறையில் இருக்கும். SHARE IT.
Similar News
News September 19, 2025
குழந்தைகளுக்கு Jam கொடுக்குறீங்களா? உஷார்!

குழந்தைகள் அடம்பிடிப்பதால் ஜாம் கொடுக்குறீங்களா? பெரும்பாலும் Fruit Jam என சொல்லப்படும் கடைகளில் கிடைக்கும் இந்த ஜாம்களில் பழங்களின் அளவு 1% தான் இருக்கும். மீதம் இருக்கும் 99% சர்க்கரையும், பதப்படுத்த பயன்படுத்திய பொருள்களும் தான் இருக்கும். இதனால் உங்கள் குழந்தைக்கு, பல் சொத்தை, உடல் பருமன், சுகர், அஜீரண கோளாறு, Hyperactivity ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News September 19, 2025
ஷூட்டிங்கில் காயமடைந்த ஜூனியர் என்டிஆர்

விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி அவர் அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்றும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊகங்களின் அடிப்படையில் ஜூனியர் என்டிஆரின் உடல்நிலை குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி

மது குடிப்பது 7 வகை கேன்சர் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக அண்மை ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. அதன்படி, மதுகுடிப்பதற்கும் கேன்சர் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் & மார்பகம் பகுதிகளில் கேன்சர் ஏற்படுகிறது. டெய்லி குடித்தாலும், கொஞ்சமா தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்களுக்கும் கூட இந்த எச்சரிக்கை பொருந்துமாம்.