News September 27, 2025
30,000 கிராமங்களில் BSNL 4ஜி சேவை: PM மோடி

நாடு முழுவதும் BSNL 4ஜி சேவையை PM மோடி தொடங்கி வைத்தார். 100% 4ஜி சேவையை வழங்கும் பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவையை தொடங்கிய முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளதாகவும், தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாகவும் PM மோடி கூறினார்.
Similar News
News January 2, 2026
தங்கம் + வெள்ளி: ஒரே நாளில் ₹5,000 உயர்ந்தது

தங்கம் <<18738095>>சவரனுக்கு ₹1,120 <<>>உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜன.2) ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹260-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 28-ம் தேதிக்கு பிறகு வெள்ளி விலை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News January 2, 2026
₹25,000 சம்பளம்.. மத்திய அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் உள்ளிட்ட 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, B.Sc., வயது வரம்பு: 18 – 26. சம்பளம்: ₹25,000 – ₹1,05,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.9. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News January 2, 2026
கொரோனா பாதிப்பு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பருவகால நோய்களில் ஒன்றாக கொரோனா உருமாறியுள்ளது. TN-ல் செப். மாதம் முதல் தற்போது வரை காய்ச்சல், வறட்டு இருமல் உள்ளிட்டவைகளால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு காய்ச்சல் சரியானாலும், 4 – 8 வாரங்கள் வரை வறட்டு இருமல் நீடிக்கிறது. இது, உருமாறிய கொரோனா ஏற்படுத்திய தாக்கம்தான். தொடர் சிகிச்சைக்குப் பின் படிப்படியாக குணமாகும் என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என DPH கூறியுள்ளது.


