News November 5, 2025

BSNL ரீசார்ஜ்.. அதிரடி விலை குறைப்பு!

image

வாடிக்கையாளர்களை ஈர்க்க, BSNL புதிய அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. Fiber கனெக்‌ஷன் மூலம், முன்னர் இருந்த ₹499 ரீசார்ஜ் பிளான் தற்போது ₹399 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிளானில், 60 Mbps வேகத்தில் மாதம் 3300 GB வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் சலுகையாக இந்த ரீசார்ஜ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், முதல் 3 மாதங்களுக்கு ₹100 தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யூஸ் பண்ணிக்கோங்க?

Similar News

News November 5, 2025

ஹர்மன்பிரீத் கவுரின் கணவர் யார்? தேடும் நெட்டிசன்கள்

image

உலகக்கோப்பையை வென்றதற்கு இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல, அவரது கையில் இருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டாட்டூ பிரம்ம யந்திரா எனக் கூறப்படும் நிலையில், அவரது கணவர் குறித்த தகவல் இல்லை.

News November 5, 2025

விலை மொத்தம் ₹5000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹163-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3000, இன்று ₹2000 என 2 நாளில் மொத்தம் ₹5000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளதால், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 5, 2025

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்?: EPS

image

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை 100 போலீஸ் தேடியும் மீட்க நான்கரை மணி நேரம் ஆனது ஏன் என EPS கேட்டுள்ளார். குற்றவாளிகளை பிடித்ததாக CM தம்பட்டம் அடித்துக்கொள்வதாக கூறிய அவர், மாணவியை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு தலைகுனிய வேண்டும் என்றார். மேலும், இருட்டான இடம் என்பதால் தாமதம் ஏற்பட்டது என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.

error: Content is protected !!