News August 3, 2024
BSF தலைவர், துணைத்தலைவர் பதவி நீக்கம்

BSF தலைவர் நிதின் அகர்வால், துணைத் தலைவர் குரானியா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1989 கேரள கேடர் அதிகாரி அகர்வால், BSF தலைவராக 2023 ஜூனில் பதவியேற்றார். இந்நிலையில் அவரை நீக்கியும், மாநில பணிக்கு அனுப்பியும் நியமனங்களுக்கான கேபினட் குழு ஆணையிட்டுள்ளது. எல்லையில் தீவிரவாதிகளின் தொடர் ஊடுருவல்கள், ஒருங்கிணைப்பின்மையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News December 4, 2025
குளு குளு தென்றலாக பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாவில், குளிர் காலத்தை ரசித்து மகிழும் புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில்லென்ற மூக்கு, குளிர்கால ஃபேஷன், ஹாட் சாக்லேட், சூரியனின் அரவணைப்பும் என்று அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குளு குளு தென்றலாக குளிர்காலத்தை என்ஜாய் செய்யும் பூஜாவின் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 4, 2025
அணு பேரழிவு நடந்த இடத்தில் செழித்து வளரும் உயிர்!

உலகின் மிகமோசமான அணு உலை பேரழிவு நடந்த பகுதியாக உக்ரைனின் செர்னோபில் உள்ளது. இங்கு நிலவும் அணு கதிர்வீச்சால் இன்று வரை மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்படும் நிலையில், கருப்பு பூஞ்சை எனும் ஒரே ஒரு உயிர் மட்டும் செழித்து வளர்ந்து வருகிறது. பிற தாவரங்கள் எப்படி சூரிய ஒளியை வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுகிறதோ, அதேபோல், இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சை ஆற்றலாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News December 4, 2025
ஆணுறைகளுக்கு வரி விதித்த சீனா.. ஏன் தெரியுமா?

ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மீது, 2026 ஜனவரி முதல் வரி விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், இத்தகைய வரி விதிப்பின் மூலம் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என சீனா நம்புகிறது. ஒரு குழந்தை கொள்கையை கடுமையாக கடைபிடித்து வந்த சீனா, 1993 முதல் கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


