News August 24, 2024
விஜய்க்காக அண்ணன் நான் இருக்கிறேன்: சீமான்

என்னை குறித்து பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருவதாக சீமான் குற்றஞ்சாட்டினார். தனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இல்லை என்று வேதனை தெரிவித்த அவர், விஜய்க்காக பேச தான் இருப்பதாக ஆதரவு குரல் கொடுத்தார். கூட்டணி குறித்த நிருபர்களின் கேள்விக்கு, தானே அனைத்தையும் கூற முடியாது, செப்.22க்கு பிறகு விஜய் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும் சஸ்பென்ஸ் வைத்தார்.
Similar News
News November 3, 2025
செங்கோட்டையனை நீக்கியது வேதனை: கார்த்தி சிதம்பரம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது வருத்தமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதிமுக என்ற மாபெரும் கட்சி கீழ்நோக்கி செல்கிறது என்று விமர்சித்த அவர், மூத்த அரசியல் தலைவர், பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவரை நீக்கியது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இது உள்கட்சி விவகாரம் என்பதால், இதற்கு மேல் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.
News November 3, 2025
புறக்கணித்த EPS, விஜய், சீமான்.. இதுதான் காரணம்

SIR-க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் ADMK, PMK, TVK, NTK, உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காதது சோசியல் மீடியாவில் சர்ச்சையானது. ஆனால், இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது திமுக; அரசு கிடையாது. அதனால்தான் தனியார் ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்படி இருக்கையில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் எப்படி இக்கூட்டத்தில் பங்கேற்கும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News November 3, 2025
Wheel Chair-ல் பிரதிகாவின் கொண்டாட்டம்!

கோப்பையை கையில் ஏந்த இந்திய அணியினர் ரெடியான போது, ஓரத்தில் Wheel Chair-ல் இருந்தபடி அதை ரசித்து கொண்டிருந்தார் பிரதிகா ராவல். அதை கவனித்த ஸ்மிருதி மந்தனா, கோப்பையை வாங்குவதற்கு முன், அவரையும் மேடையேற்றினார். Wheel Chair-ல் இருந்த படியே, பிரதிகா ராவல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரதிகா, தொடர்ந்து விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது


