News August 12, 2024
பாதுகாப்பு அமைச்சகத்தின் B.R.O. அமைப்பில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் எல்லைச் சாலை அமைப்பில் (B.R.O) 466 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ராட்ஸ்மேன், சூப்பர்வைசர், டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. முழு விவரமும் www.bro.gov.in இல் அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யலாமே. PLS SHARE
Similar News
News March 7, 2026
BREAKING: ₹2,300 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்தார்

TN அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ₹1,000-லிருந்து ₹1,500 ஆகவும், நடுநிலைப்பள்ளியில் பணிபுரிவோருக்கு ₹1,500-லிருந்து ₹2,300 ஆகவும் ஊதிய உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 38,000 பேர் பயனடைவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
News March 7, 2026
மனைவி, மகளை விரட்டிவிட்டு.. விஜய்யை சாடிய இயக்குநர்

தவெக சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவை இயக்குநர் அமீர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த அவர், மனைவி, மகள் இருவரையும் வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.
News March 7, 2026
சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் இழப்பீடு

சைபர் மோசடியில் ₹50,000-க்கும் குறைவான தொகையை இழந்திருந்தால், ₹25000 வரை இழப்பீடு வழங்க RBI ஆலோசித்து வருகிறது. பணத்தை இழந்த 5 நாள்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் இந்த தொகை வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து ஏப்ரல் 6 வரை வங்கிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால், ஜூலை 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும்.


