News October 4, 2025
இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர்

UK PM கீர் ஸ்டார்மர், வரும் 8-ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து PM மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதுதவிர உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டார்மரின் முதல் இந்திய பயணமாகும்.
Similar News
News October 5, 2025
பிம்பங்களை நம்புவதும் மூடநம்பிக்கை: கனிமொழி

மூதாதையர்கள் சொன்னதை அப்படியே கடத்துவது மட்டும் மூடநம்பிக்கையல்ல, நம்மை ஆள்வதற்கு தகுதி உண்டா இல்லையா என்று தெரியாமல் சில பிம்பங்களை நிஜமாக நம்புவதும் மூடநம்பிக்கை தான் என்று விஜய்யை கனிமொழி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒருவர் வந்துவிட்டார், அவர் மாற்றிவிடுவார் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே என்றும் சாடினார். இனி கற்பிக்கும் மூடநம்பிக்கைகளையும் கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News October 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 5, புரட்டாசி 19 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News October 5, 2025
ஹமாஸ் விரைவாக முடிவெடுக்க வேண்டும்: டிரம்ப்

டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த இஸ்ரேல், அன்றிரவே காசாவில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பின்னர் இத்தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தாக்குதலை நிறுத்தியதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், பணயக் கைதிகளை விடுவிப்பது மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களை ஹமாஸ் விரைவாக ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.