News July 24, 2024

பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியா வருகை

image

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்த பின், முதல் முறையாக இந்தியா – பிரிட்டன் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாம்மி இன்று இந்தியா வந்தார். வர்த்தகம், இருதரப்பு, சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்த ஒப்பந்தம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.

Similar News

News March 6, 2026

சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.

News March 5, 2026

ராசி பலன்கள் (06.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 5, 2026

லோனில் பைக் / கார் வாங்குபவர்களுக்கு நற்செய்தி!

image

லோனில் பைக் அல்லது கார் வாங்கும்போது, RC புக்கில் கடன் கொடுத்த வங்கி/ நிதி நிறுவத்தின் பெயர் இருக்கும். லோன் கட்டி முடித்த பின்னரே இதை மாற்ற முடியும். இதற்கு நீங்கள் வங்கிக்கும், RTO-க்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது. இனி அதற்கு அவசியமில்லை. லோன் செலுத்தி முடித்த உடனே, ஆன்லைனில் தானாகவே RC-ல் அப்டேட் செய்யப்படும். இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் விரிவுப்படுத்தப்படும்.

error: Content is protected !!