News May 2, 2024

பிரிஜ்பூஷணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

image

மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கிய எம்பி பிரிஜ்பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்கு மக்களவைத் தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கெய்சர்கஞ்ச் தொகுதியில் பிரிஜ்பூஷண் மீண்டும் போட்டியிடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பாஜக இம்முறை வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு பதில், மகன் கரண்சிங் பூஷண் சிங்கை அறிவித்துள்ளது.

Similar News

News March 31, 2026

தென்காசி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

News March 31, 2026

மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரை.. எச்சரிக்கை

image

ஃபங்ஷன் வருது, கோயிலுக்கு போகணும், இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக பல பெண்கள் பீரியடை தள்ளிபோட மாத்திரை உட்கொள்கின்றனர். ஆனால், இது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குமட்டல், தலைவலி, மூட் ஸ்விங் போன்ற Side effects ஏற்படுவதுடன் 75% பேருக்கு பீரியட் பிரச்னைகள், அதிக ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தக்கட்டு, ஹார்மோன் பாதிப்பும் ஏற்படுமாம். ALERT!

News March 31, 2026

அண்ணாமலைக்கு அழைப்பு.. ஹெலிகாப்டரில் புறப்பட்டார்

image

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தொடர்ந்து செய்திகள் வந்தன. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி பிரசாரத்தில் இருந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!