News October 20, 2025
மூச்சு பிரச்சனை: குழந்தைகள் கிட்ட இத கவனிங்க முதல்ல!

குழந்தைகளுக்கு ஏதேனும் மூச்சு பிரச்சனை இருந்தால் அவர்களால் கூற முடியாது. அதை நாம் தான் கவனிக்க வேண்டும். அப்படி கண்டறிய பயன்படும் சில அறிகுறிகள்: * வழக்கத்தை விட விரைவாக மூச்சு விடுவது *மூச்சு விடும்போது மார்பு சுருங்குதல் *முனகுதல் அல்லது சத்தத்துடன் சுவாசித்தல் *உதடு, நாக்கு, நகம் நிறம் மாறுவது. *அசாதாரண தூக்கம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை முக்கியம் என்பதே டாக்டர்களின் அட்வைஸ்.
Similar News
News October 20, 2025
மூத்த அரசியல்வாதி காலமானார்!

பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி மகாதேவ்ராவ் சிவங்கர்(83) காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 5 முறை MLA-வாக, அம்மாநிலத்தின் நிதியமைச்சராக ஜூன் 1997- அக்டோபர் 1999 வரை பதவியில் இருந்துள்ளார். மேலும், 2004- 2009 வரை MP-யாகவும் பணியாற்றினார். இவரின் மறைவுக்கு பாஜக மூத்த அரசியல்வாதிகளில் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 20, 2025
விஜய்யை தடுக்க முடியாது: எல்.முருகன்

கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்ப்பதற்கு விஜய்க்கு முழு உரிமை உள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அவர், அவரை தடுத்து நிறுத்த அரசுக்கு உரிமையில்லை எனவும் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அவரது கடமை என்றும் தெரிவித்தார். வீட்டினுள்ளேயே விஜய் இருப்பதாக எழும் விமர்சனத்துக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
News October 20, 2025
நடிகை பிரியங்கா மோகன் கர்ப்பமா? CLARITY

நடிகை பிரியங்கா மோகன், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோஸை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதுவரை அவர் திருமணம் செய்யாத நிலையில், இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘OG’ படத்தின் போட்டோஸை அவர் பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் அவரது பதிவுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.