News January 22, 2025
அதிகரிக்கும் Breast Cancer: ஆண்டுக்கு இவ்வளவா?

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2021இல் 12.5 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், 2030க்குள் ஆண்டுக்கு 50,000 பேர் வழக்கத்தை கூடுதலாக பாதிக்கப்படுவர். ஆகவே 2030இல் ரூ.2.5 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படும். இங்கு Late ஆகவே கேன்சர், கண்டறியப்பட்டாலும் முறையான சிகிச்சை இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. கவனம், லேடீஸ்!
Similar News
News November 21, 2025
BREAKING: நண்பர் அதிரடி கைது.. நடிகர் சிம்பு அதிர்ச்சி

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், Ex உதவியாளருமான சர்புதீன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் சர்புதீனும் ஒருவர். ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நண்பர் கைதால் சிம்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
News November 21, 2025
EPS-ன் ஆட்சியில் கோவைக்கு மெட்ரோ உறுதி: வானதி

EPS முதல்வரானவுடன் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று வானதி சீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்டத்தினை, வரையறைகளுக்கு உட்பட்டு மாற்றி அமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி தமிழகத்திற்கு எதிராக இருப்பது போல நடத்தப்படும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 21, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


