News April 3, 2025

BREAKING: மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு

image

கோவை மாவட்த்தில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் சாமியார் வேடத்தில் வந்த நபர் வேலை திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நாளை(ஏப்.3) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை ஒட்டி பலத்த பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News April 4, 2025

கோவைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 3, 2025

மருதமலையில் இப்படி ஒரு ரகசியமா? 

image

மருதமலை முருகனை தரிசிக்க பலமுறை நாம் சென்றிருப்போம். ஆனால் மலையேறும் வழியில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், மலையில் 18ம் படியை கடந்தால் மலைச்சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்தில் இருக்கும். அந்த 3 கற்களும் 3 திருடர்களாம். மருதமலையில் உண்டியலை திருடி சென்றபோது, அவர்களை பிடித்த முருகன், ‘ நீவிர் கற்சிலைகளாக கடவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் சிலையானார்களாம். Share பண்ணுங்க.

News April 3, 2025

மருதமலையில் கும்பாபிஷேகம்: 1000 போலீசார் பாதுகாப்பு

image

பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7ம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (4-ந்தேதி) கும்பாபிஷேகம் நாளை காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!