News April 3, 2025
BREAKING: வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது

12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கு நிறைவேறும் பட்சத்தில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும்.
Similar News
News October 31, 2025
திருச்சி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை அருகே கடந்த 20-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது மதுரை – திருச்சி ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் நேற்று (அக்.30) உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 31, 2025
ராமதாஸுக்கு திமுக அழைப்பு

அப்பா – மகன் என பிரிந்திருக்கும் பாமகவில், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது. NDA கூட்டணியில் இணைய அன்புமணி விரும்புவதாகவும், DMK உடன் ராமதாஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பாமக சார்பில் ராமதாஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது உள்கட்சியில் மட்டுமின்றி, திமுக கூட்டணியிலும் பேசுபொருளாகியுள்ளது.
News October 31, 2025
தேவரின் தங்க கவசம் அகற்றப்படும்: சீமான்

முத்துராமலிங்க தேவருக்கு தங்கம், வெள்ளி கவசங்களை அணிவித்து, அவரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவராக சித்தரிக்கிறார்கள் என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவராக வாழ்ந்தவர் தேவர் என்றும் குறிப்பிட்டார். தான் ஆட்சிக்கு வந்தால், தேவர் நினைவிடத்திலுள்ள தங்க, வெள்ளி கவசங்களை எடுத்துவிட்டு, அறக்கட்டளை தொடங்கி, அதில் வரும் நிதியை கொண்டு நலத்திட்டங்களை வழங்குவேன் என்றார்.


