News April 14, 2024
BREAKING : புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் புதிய கட்சியை தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். மக்களுக்கு போதுமான வசதி இல்லை; அதனால் தான், நான் அரசியலுக்கு வருகிறேன். 2026ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் எனக் கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் கட்சியின் பெயர் வெளியாகும் என தெரிகிறது.
Similar News
News November 9, 2025
7 நாள்களுக்கு 7 மூலிகை சாறுகள்!

இன்றைய சூழலில் அடிக்கடி உடலில் ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கிறது. நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் எளிய மூலிகைகள் பல, உடலை வலுப்படுத்தவும், நோய்களை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் அதை மருந்தாக சாப்பிடுவது பலருக்கும் சிரமமாக உள்ளது. ஜூஸ் ஆக குடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர். அப்படி, வாரம் முழுவதும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 7 மூலிகை சாறுகள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.
News November 9, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.
News November 9, 2025
‘How to kill old lady’ யூடியூப் பார்த்து கொலை செய்த மருமகள்!

‘How to kill an old lady’ என யூடியூப்பில் வீடியோ பார்த்து, மருமகள் மாமியாரை கொலை செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில், கணவரிடம் மாமியார் பொய் சொல்வதை பொறுத்து கொள்ளாத மருமகள், சதித்திட்டம் தீட்டியுள்ளார். வீட்டிலேயே மாமியாரை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளார். பூஜை அறையில் விளக்கு தீப்பிடித்து மாமியார் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய நிலையில், விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.


