News September 3, 2025

BREAKING: வைரஸ் பரவல்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணியுமாறு நேற்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 5, 2025

ஆப்கனில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

image

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுகுரல்களுக்கு இடையே மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.2 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது டெல்லி, ஜம்மு & காஷ்மீர் வரை உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

News September 5, 2025

ரிலீஸுக்கு பின்பு புரமோஷன்? துல்கர் சல்மான் பதில்

image

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘Lokah Chapter 1: Chandra’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், ரிலீஸுக்கு முன்பு சரியான புரமோஷன் செய்யாத படக்குழு, தற்போது பேட்டிகளை வாரி வழங்கி வருகிறது. இதுகுறித்து பேசிய பட தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இந்த வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது இயற்கையாகவே கிடைத்தது என்று நெகிழ்ந்தார். நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News September 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 449 ▶குறள்: முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. ▶ பொருள்: கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

error: Content is protected !!