News April 7, 2025
BREAKING: விராட் கோலி அதிரடி அரை சதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அதிரடியாக அரை சதம் விளாசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், படிக்கல், கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. கோலி 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.
Similar News
News December 5, 2025
இன்று உலக மண் தினம்.. ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

உணவின் தொடக்கம் இந்த மண். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நம்பி இருப்பது இந்த மண்ணைதான். ஆனால், நாம் மண் பற்றி சிந்திக்கிறோமா? இல்லை! அதை சிந்திப்பதற்கான நாள்தான் இன்று. குறைந்து வரும் மண்வளம், மாசுபாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னெடுக்க காரணமாக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் பிறந்தநாளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
News December 5, 2025
தமிழ் சினிமாவின் சிகரம் மறைந்தது.. குவியும் இரங்கல்

அரை நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக விளக்கி வந்த <<18470141>>AVM சரவணன்(86)<<>> நேற்று மறைந்தார். நேற்று நேரில் செல்ல முடியாத திரை பிரபலங்கள் பலரும் இன்று அவரது குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், எரிமேடையில் AVM சரவணன் உடலை பார்த்தபோது, எனக்கான காசோலையில் கையொப்பமிட்ட கையை பார்த்து கண்ணீர் முட்டியது என கவிஞர் வைரமுத்து வேதனையுடன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

<<18463810>>திருப்பரங்குன்றத்தில்<<>> தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் ராஜ்யசபா குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.


