News January 19, 2025

BREAKING: விஜய் உண்ணாவிரத போராட்டம் ?

image

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை அம்பேத்கர் திடலில் விஜய் சந்திக்க திட்டமிட்டார். ஆனால், தனியார் மண்டபத்தில் தான் மக்களை வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக இருக்கிறது. இதனால், தற்போது புஸ்ஸி ஆனந்த் மீண்டும் காஞ்சி எஸ்.பியை சந்தித்து பேசி வருகிறார். ஒருவேளை போலீஸ் அனுமதி தரவில்லை என்றால், மக்களுடன் சேர்ந்து விஜய் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 10, 2026

மனைவிக்கு உருக்கத்துடன் நன்றி சொன்ன சஞ்சு சாம்சன்

image

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமான சஞ்சு சாம்சன் தன் மனைவி சாருலதாவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டு, அதை உங்களுக்கானதாகவும் மாற்றியதற்கு நன்றி என கூறியுள்ளார். என் வாழ்க்கையின் சிறந்த பக்கத்தை விட மோசமான பக்கத்திலும் இன்னும் ஆதரவாக நின்றீர்கள்; மிக்க நன்றி, என் அன்பான பொண்டாட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 10, 2026

விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி: ஜெகன் மூர்த்தி

image

விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், விஜய் NDA கூட்டணிக்கு வருவது உண்மையா என தெரியவில்லை. இதுவரை வதந்தியாகவே உள்ளது என்றார். ஒருவேளை விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் NDA கூட்டணி தான் வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.

News March 10, 2026

அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது.. சோனா ஓபன் டாக்!

image

‘ஆளவிடுங்கடா சாமி, அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது’ என வடிவேலுவுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகை சோனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ‘குசேலன்’ படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்த நிலையில், அவரை தன்னால் ஹேண்டில் செய்ய முடியாது என்பதால் நடிக்க மறுத்ததாக தெரிவித்தார். இதற்கு மேல் எதுவும் பேச முடியாது என குறிப்பிட்ட அவர், சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!