News October 11, 2025
BREAKING: விஜய் எடுத்த அதிரடி முடிவு

கரூர் சம்பவம், தவெக – அதிமுக கூட்டணி சர்ச்சை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளின் நிலை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்தடுத்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இன்று (அ) நாளைக்குள் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கரூர் துயர சம்பவத்திற்கு 16 நாள்கள் துக்கம் அனுசரித்து வருவதாகவும், விரைவில் பேசுவோம் எனவும் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
Similar News
News March 19, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 19, பங்குனி 5 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்:6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News March 19, 2026
தேர்தல் நேரத்தில் ‘அமைதிப்படை’ ரீ-ரிலீஸ்

தமிழில் எத்தனையோ அரசியல் நையாண்டி படங்கள் வந்தாலும், எப்போதுமே டாப்பில் இருப்பது ‘அமைதிப்படை’ படம்தான். 1994-ல் வெளியான இப்படம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருப்பதுதான் தனிச் சிறப்பு. அப்படிப்பட்ட ‘அமைதிப்படை’ ஏப்ரல் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யபடுகிறது. இதன் புதிய டிரெய்லர் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது. தேர்தல் நேரத்தில் படம் வருவதால் நல்ல வைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமிக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி NDA-வில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதில் பாஜக, NR காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறியில் நீடிக்கிறது. இதனிடையே CM ரங்கசாமி தலைமையிலான நடந்த அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு ரங்சாமி சென்றுள்ளார்.


