News October 15, 2025
BREAKING: இரவில் விஜய் எடுத்த அதிரடி

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்து ஆறுதல் கூறி, நேரில் நிதியுதவி அளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பதற்கான இடத்தை தர, பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், இடத்தை தேர்வு செய்தபின், தீபாவளிக்கு பிறகே விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 15, 2025
மீண்டும் ரீ-ரிலீஸாகும் அஞ்சான்.. இது வேற வெர்ஷன்!

‘அஞ்சான்’ படம் வரும் நவ. 28-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸாகவுள்ளது. தோல்வி படத்தை யார் மீண்டும் தியேட்டரில் பார்ப்பாங்க என கேள்வி எழுந்த நிலையில், புது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ‘அஞ்சான்’ படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸை வாங்கியவர், வேறு பாணியில் எடிட் செய்து வெளியிட, அது யூடியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புது வெர்ஷனை தான் தியேட்டரில் வெளியிடுகிறாராம் லிங்குசாமி. இது வெற்றி பெறுமா?
News October 15, 2025
BREAKING: வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

கரூர் விவகாரத்தில் பேரவையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கரூர் துயரம் பற்றிய விவாதத்தின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி, CM இருக்கை அருகிலேயே தரையில் அமர்ந்து EPS உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பாவுவை கண்டித்தும் அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
News October 15, 2025
உடற்கூராய்வு: இபிஎஸ் கேள்வி, அமைச்சர் பதில்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் உடல்களுக்கு ஒரே இரவில் எப்படி உடற்கூராய்வு செய்தீர்கள் என்று சட்டப்பேரவையில் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வளவு அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன் என்றும் அவர் வினவினார். அதற்கு, 25 மருத்துவர்களை கொண்டு ஆட்சியர் அனுமதியுடன் தான் உடற்கூராய்வு செய்ததாக அமைச்சர் மா.சு., பதிலளித்துள்ளார். இதற்கான முழு வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.