News August 20, 2025

BREAKING: ரோட்டிலேயே செல்லும் விஜய்

image

தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு புறப்பட்டுள்ளார். எப்போதும் தனி விமானத்தில் பயணிக்கும் விஜய், தற்போது சாலை வழியாக செல்வதால் வழியில் மக்களைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News August 20, 2025

Asia Cup: 5 கேப்டன்கள்.. 8 முறை சாம்பியன்ஸ்

image

ஆசிய கோப்பை 2025 தொடர் செப்.9-ல் துபாயில் தொடங்குகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் களம் காண்கின்றனர். 1984-ம் ஆண்டு இத்தொடர் அறிமுகமானதில் இருந்து இதுவரை இந்தியா 8 முறை கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. 5 கேப்டன்கள் இக்கோப்பையை வென்றுள்ளனர். அவர்கள் யார், எப்போது வென்றனர் என்ற முழுத் தகவல்களை மேலே உள்ள படங்களில் பாருங்கள்.

News August 20, 2025

OFFICIAL: அரசியலில் நடிகர் சூர்யா? புதிய விளக்கம்

image

விஜய்யின் வருகையால் கொங்கு பகுதியில் திமுக வாக்குகள் சரிய வாய்ப்புள்ளதாக கருதி, அதே பகுதியை சேர்ந்த சூர்யாவை களமிறக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதில் உண்மையில்லை என்று அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் விளக்கமளித்துள்ளது. அகரமும், சினிமாவும் அவரது வாழ்வுக்கு நிறைவைத் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இயக்கம், சினிமாவில் மட்டுமே அண்ணனின் (சூர்யா) கவனம் இருக்கும் எனக் கூறியுள்ளது.

News August 20, 2025

மதுரையில் விஜய்யின் அப்பா! அம்மா!

image

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா மதுரை வந்தடைந்தனர். அவர்களுக்கு தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர்கள், இன்று மாலை மதுரைக்கு வரும் விஜய்யை சந்திக்கின்றனர். இதன்பின், விஜய்யுடன் அவர்களும் மாநாடு நடைபெறும் திடலை பார்வையிட உள்ளனர்.

error: Content is protected !!