News October 28, 2025

BREAKING: விஜய் வெளியிட்டார்

image

கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் களத்திற்கு வந்த விஜய், அறிக்கை வாயிலாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்கட்சிகள், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதனிடையே, <<18127990>>வெற்று விளம்பரத்திற்காக<<>> நானும் டெல்டாக்காரன் என CM ஸ்டாலின் பெருமை பேசி வருவதாக விஜய் விமர்சித்துள்ளார். விஜய்யின் அறிக்கைக்கு பிறகு தவெகவினர் மீண்டும் SM-ல் ஆக்டீவாக தொடங்கியுள்ளனர்.

Similar News

News October 28, 2025

’Bad Girl’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

image

வர்ஷா பரத் இயக்கிய ‘பேட் கேர்ள்’ படம், U/A 16+ சான்றிதழுடன் செப். 5-ம் தேதி வெளியானது. இதன் டீசர் வெளியானதில் இருந்தே இப்படத்தை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நவ.4-ம் தேதி Hotstar ஓடிடி தளத்தில் நீங்கள் இப்படத்தை பார்க்கலாம்.

News October 28, 2025

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு

image

2-ம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரள CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக திணிக்கும் முயற்சி எனவும், மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ECI செயல்பட கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, ECI-ன் அறிவிப்பை திமுக கூட்டணி கட்சிகளும் சாடியிருந்தது.

News October 28, 2025

வழுக்கை தலையில் 20 நாளில் முடி வளரும்.. வந்தாச்சு மருந்து!

image

காதலி இல்லாத வலியை விட, முடி கொட்டும் வலிதான் இளைஞர்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், இப்பிரச்னைக்கு தைவான் ஆய்வாளர்கள் தீர்வு கண்டறிந்துள்ளனர். National Taiwan University-யை சேர்ந்த ஆய்வாளர்கள், 20 நாள்களில் வழுக்கை தலையில் முடி வளர்க்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் மீது இன்னும் சோதிக்கப்படவில்லை என்றாலும், ‘பண்டிகைய கொண்டாடுங்கலே’ என்ற மோடில் நெட்டிசன்கள் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர்.

error: Content is protected !!