News October 18, 2025

BREAKING: தலா ₹20 லட்சம் வழங்கினார் விஜய்

image

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, விஜய் தரப்பில் தலா ₹20 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 41 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 22, 2026

திமுகவின் பண்ணையார்த்தனம் மாறவே இல்ல: ஆதவ்

image

பட்டியலின மக்களின் முகமாக வளர்ந்து வந்தவர்தான் திருமாவளவன், அவர் எல்லாவற்றிலும் திமுகவுடன் நின்றிருக்கிறார் என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அப்படிபட்டவருக்கு 6 சீட் கொடுத்து, ‘இருந்தா இரு.. இல்லையென்றால் போ’ என திமுக பண்ணையார்த்தனம் போல நடந்துகொள்வதாக விமர்சித்துள்ளார். மேலும், திமுக பண்ணையார்த்தனத்தில் இருந்து மாறவே இல்லை எனவும் சாடியுள்ளார்.

News March 22, 2026

திமுகவுடன் இணைய மாட்டேன்.. சற்றுமுன் முடிவை தெரிவித்தார்

image

ராமதாஸ்-சசிகலா கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்த பாமக அருள் திமுகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், இதுபற்றி அவரே விளக்கமளித்துள்ளார். கூட்டணியில் தனக்கோ, ஜி.கே.மணிக்கோ விருப்பமில்லை என்ற அவர், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தும் இதுவே என கூறியுள்ளார். இருந்தாலும், மாற்று கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை எனவும், கடைசி வரை ராமதாஸ் உடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

அரசு அதிகாரி தற்கொலை: அமைச்சர் ராஜினாமா

image

அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த புகாரில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸ் மாவட்ட அரசு கிடங்கு கழக மேலாளார் ககன்தீப் சிங், SM-ல் தனது சாவுக்கு காரணம் லால்ஜித் எனக் கூறிவிட்டு தற்கொலை செய்தார். அவரை ₹10 லட்சம் லஞ்சம் வாங்க அமைச்சர் வற்புறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தால் ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

error: Content is protected !!