News September 9, 2025
BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல் நிறைவு

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இரு அவைகளிலும் மொத்தம் 782 MP-க்கள் உள்ள நிலையில், 392 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார். NDA கூட்டணிக்கு இரு அவைகளிலும் சேர்த்து 422 MP-க்களின் ஆதரவு இருப்பதால், அதன் சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
Similar News
News September 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.
News September 10, 2025
சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.