News August 9, 2024

BREAKING: சவுக்கு சங்கர் வழக்கில் தீர்ப்பு

image

சவுக்கு சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கும் வகையில் சவுக்கு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து தாய் கமலா தொடர்ந்த வழக்கில், சவுக்கு சங்கர் கருத்தால் பொது அமைதிக்கு குந்தகம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறி, வேறு வழக்குகளில் ஜாமின் பெற தேவையில்லையென்றால், அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 26, 2025

காஞ்சி: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

காஞ்சிபுரம் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., பொங்கலுக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News November 26, 2025

2026-ல் மெகா ட்ரீட்டுக்கு ரெடியாகும் சூர்யா!

image

‘கங்குவா’, ‘ரெட்ரோ’ போன்ற படங்கள் ஏமாற்றிய நிலையில், 2026-ல் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்க சூர்யா ரெடியாவதாக கூறப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் ‘கருப்பு’ படம் ஜனவரி 23-ம் தேதி வெளிவரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரியின் ’சூர்யா 47’ சம்மருக்கு வெளியாகும் என்றும் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரலாம் எனவும் பேசப்படுகிறது.

News November 26, 2025

செங்கோட்டையனுடன் திமுக அமைச்சர்.. திடீர் திருப்பம்

image

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செங்கோட்டையனை திமுக முக்கிய அமைச்சர் சற்றுமுன் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது திமுகவில் இணைய வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!