News April 22, 2025
BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <
Similar News
News January 2, 2026
ஹேப்பி Introverts டே!

10 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் இருந்தால், அதில் நிச்சயம் ஒரு Introvert இருப்பான். அனைவரிடமும் எளிதில் பேச மாட்டார்கள். கூட்டத்தில் நிற்க கூச்சம், பலர் முன்னிலையில் சத்தமாக பேச தயக்கம்; கோபம், துக்கம் என அனைத்தையும் தங்களுக்குள் புதைத்து வைக்கும் ரகசியம் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களின் மெளனமே பல இடங்களில் இவர்களுக்கு பலமாக மாறிவிடுகிறது. உங்க கேங்கில் இருக்கும் Introvert யாரு.. கமெண்ட் பண்ணுங்க?
News January 2, 2026
தமிழகமே எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகிறது

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு நாளை விடிவுகாலம் பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஜன.6 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில், அவர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தமிழகமே வியக்கும் வகையில், நாளை OPS குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 2026-ம் ஆண்டில் தான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது மிகவும் மகிழ்ச்சி என்றார். அரசியல் தலைவர்கள் மக்களிடம் சென்று தங்களது கருத்துகளை கூற, நடைபயணம் உதவும் என்றும், நடைபயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போதுதான் பேசுவார்கள் எனவும் தெரிவித்தார்.


