News March 26, 2025
BREAKING: UPI சர்வர் இயங்கவில்லை

பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் UPI சர்வர் செயல்படாததால், நாடு முழுவதும் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் PhonePe, Google Pay, மற்றும் Paytm பயன்படுத்துவோர், பணத்தை அனுப்பவும், பெறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவலை பகிர்ந்து வருகின்றனர். பலருக்கும் பரிவர்த்தனை பாதியிலேயே நின்று போனதாக கூறப்படுகிறது. உங்களுக்கு இந்த பிரச்னை உள்ளதா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News March 30, 2025
நான் மாமனார் காசுல வாழல: அண்ணாமலை அட்டாக்

திமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுவதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு, பதிலளித்துள்ள அண்ணாமலை, திமுகவுக்கு எதிராக பேசி அதிக அவதூறு வழக்குகளை எதிர்கொண்டிருப்பவன் தான் என்றும், சிலரை போல மாமனார் காசில், வாழ்பவனல்ல, லாட்டரி விற்ற காசில் அரசியலுக்கு வந்தவனல்ல என்றார். மேலும், பவருக்காக தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், மக்களுக்காக தான் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
News March 30, 2025
ஏப்ரல் மாதம்: அடித்து நொறுக்க போகும் 4 ராசிகள்!

கிரகங்களின் நகர்வுகளின்படி, வரும் ஏப்ரல் மாதம் 4 ராசிக்காரர்கள் அடித்து தூள் கிளப்பப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகள்தான் அவை. தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். பயணம் ஆதாயம் தரும். ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும். ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட இது சரியான நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
News March 30, 2025
ITR-U தாக்கல்: நாளையே கடைசி

2022 முதல் 2025ம் நிதியாண்டு வரை திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை (ITR-U )தாக்கல் செய்ய IT அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. நாளைக்குள் தாக்கல் செய்தால், 2022-23க்கு 50% கூடுதல் வரி மற்றும் வட்டி, 2023-24, 2024-25க்கு 25% கூடுதல் வரி மற்றும் வட்டி. அதன்பிறகு தாக்கல் செய்தால் 2024-25 தவிர்த்து அனைத்து கணக்குக்கும் கூடுதலாக 50% வரி மற்றும் வட்டி செலுத்த வேண்டும்.