News October 12, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராக சரிந்துள்ளதாக RBI கூறியுள்ளது. கடந்த 3-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 27.6 கோடி டாலர் சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால், ரூபாயின் மதிப்பு சரியும். மேலும் இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும், விலைவாசி உயர்வதோடு பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News October 12, 2025

திருப்பத்தூர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா!

image

திருப்பத்தூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு<> க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம்

image

<<17955513>>ரவுடி நாகேந்திரன்<<>> உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியான நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி அக். 9-ம் தேதி இறந்தார். உடல் வியாசர்பாடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நாகேந்திரனின் உடல் முன்பு அவரது 2-வது மகன் அஜித் ராஜா கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்டார்.

News October 12, 2025

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: அமைச்சர்

image

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்டண வசூலை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரித்தார்.

error: Content is protected !!