News September 3, 2025
BREAKING: உதயநிதி மகன் இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவன CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த தகவல் உறுதியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லிக்கடை’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில், ரெட் ஜெயண்ட் மூவிஸ், இன்பன் உதயநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News April 11, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹200 சரிவு!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹1,000 அதிகரித்த நிலையில், இன்று ₹200 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் 22 கேரட் தங்கம் கிராம் ₹14,100-க்கும், சவரன் ₹1,12,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹265-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,65,000-க்கும் விற்பனையாகிறது.
News April 11, 2026
ராஜ்மோகன், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு

எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், செய்தி தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்ட மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளை அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் கங்காதேவி கொடுத்த புகாரின்பேரில், சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News April 11, 2026
கிட்னி திருட்டை நிரூபித்தால் ₹1 கோடி பரிசு

திமுக MLA கதிரவன் ஹாஸ்பிடலில் கிட்னி திருடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், மண்ணச்சநல்லூரில் மீண்டும் போட்டியிடும் கதிரவன் இதை மறுத்துள்ளார். தனது ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைகள் அரசு அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது எனக் கூறிய அவர், கிட்னி திருட்டு குற்றச்சாட்டை நிரூபித்தால், ஒரு கோடி பரிசு அளிப்பதாகவும், அரசியலை விட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.


