News March 27, 2024
BREAKING: இரண்டு விமானங்கள் மோதி விபத்து

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானமும் ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு புறப்பட தயாராக நின்றிருந்த நிலையில், ஓடுபாதையில் புறப்பட தயாரான இண்டிகோ விமானம் அதன் மீது மோதியது. இதில் இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. நல் வாய்ப்பாக 300 பயணிகளும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
Similar News
News December 25, 2025
சிலிண்டருக்கு மானியம்; உடனே இதை செக் பண்ணுங்க

சமையல் சிலிண்டருக்கான மானியம் உங்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். ➤இதற்கு, www.mylpg.in இணையதளத்திற்கு செல்லுங்கள் ➤இதில், நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் கம்பெனியின் லோகோவை க்ளிக் செய்யுங்கள் ➤மொபைல் எண் & LPG ஐடியை உள்ளிடுங்கள் ➤பின்னர் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும் ➤மானியம் வரவில்லை என்றால் <
News December 25, 2025
போக்சோ வழக்கில் கைதாகும் RCB வீரர்

போக்சோ வழக்கில் ஜாமின் கோரிய RCB வீரர் யஷ் தயாலின் மனுவை ஜெய்ப்பூர் போக்சோ கோர்ட் நிராகரித்துள்ளது. கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி எமோஷ்னல் பிளாக்மெயில் செய்து சிறுமி ஒருவரை யஷ் தயால் பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்டது. மொபைல் Chat, போட்டோக்கள், ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. கைதாகும் பட்சத்தில் அவர் IPL-ல் விளையாட முடியாமல் போகலாம்.
News December 25, 2025
பட்டுப்புடவையில் தேவதையாக கீர்த்தி ஷெட்டி!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Gen Z-யின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் ரெகுலராக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பட்டுப்புடவையில் தேவதையாக மின்னும் அவரது போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் மேலே SWIPE பண்ணி பாருங்க…


