News April 2, 2024
BREAKING: T.R.பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறார்?

திமுகவின் மூத்த தலைவர் T.R.பாலுவின் மகள் T.R.B.மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் T.R.பாலுவின் முதல் தாரத்து மகள். அமைச்சர் T.R.B ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருந்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில், T.R.B.மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும்.
Similar News
News October 31, 2025
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்த ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மாதம் ₹6.50 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டு ஜாய் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. ரங்கராஜுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.
News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.


