News October 5, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

காலாண்டு விடுமுறை முடிந்து நாளை வகுப்புகள் தொடங்கும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பருவமழை தொடங்கவுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. *உபயோகம் இல்லாத மின் பொருள்கள் பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது. *பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
Similar News
News October 5, 2025
தாடி இல்லாமல் WC வென்ற கேப்டன்கள்: PHOTOS

தாடி வைக்காத கேப்டன்களால் தான் ODI WC-ஐ வெல்ல முடியும் என்ற Meme வைரலாகி வருகிறது. 1983-ல் இந்தியா WC-ஐ வென்ற போது கேப்டன் கபில்தேவுக்கு தாடியில்லை. 2011-ல் WC-ஐ இந்தியா கைப்பற்றிய போது கேப்டன் தோனி கிளீன் ஷேவில் இருந்தார். தாடி இல்லாத கில்லும் WC-ஐ வெல்வார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாடி வைக்காமல் WC-ஐ வென்ற கேப்டன்களின் போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க.
News October 5, 2025
ராமதாஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனை மேற்கொள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை ஹாஸ்பிடல் நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாமக தொண்டர்களுக்கு மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 5, 2025
பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடல் அழகி அரோரா சின்க்ளேர், குக் வித் கோமாளி புகழ் கனி, VJ பார்வதி, துஷார், சபரி நாதன் மற்றும் FJ உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இன்னும் யாரெல்லாம் இருப்பாங்கன்னு guess பண்ணுங்க..!