News April 10, 2024
BREAKING: இடியுடன் மழை பெய்யும் மக்களே

கடந்த 2 வாரமாக வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், பிற்பகல் நேரத்தில் வெளியே வரமுடியாததால் மழை பெய்யாதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு, மக்களின் மனதை குளிர வைத்துள்ளது. இதனால், வெப்பம் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 15, 2025
INTERNET வந்து இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு

3G, 4G, 5G எல்லாம் வந்தாச்சு… அடுத்து 6G எப்ப வரும்ணு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1995-ல் இதே நாளில், இந்தியாவில் பொதுமக்களுக்காக இணைய சேவை அறிமுகமான போது, அதன் வேகம் 9.6 kbps மட்டுமே (விவரங்களுக்கு படத்தை பார்க்க). VSNL தான் ஆரம்பத்தில் சேவை வழங்கியது. அதன்பின் தனியார் நிறுவனங்கள் நுழைய, இன்று 70 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தினமும் இணையம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
News August 15, 2025
மழை வெளுத்து வாங்கப் போகுது.. கவனமா இருங்க!

இன்று இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆக. 21-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க நண்பர்களே!
News August 15, 2025
தேச வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: PM

இல.கணேசனின் மறைவு செய்தி தனக்கு வலியை தந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க கடுமையாக பணி செய்ததாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் என்றும் இரங்கல் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் எனவும் இல.கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.