News April 13, 2024
BREAKING: ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி

PBKS அணிக்கு எதிரான ஆட்டத்தில் RR அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 27 ஆவது போட்டியில், டாஸ் வென்ற RR பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த PBKS அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 148 ரன்கள் இலக்கை துரத்திய RR அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
Similar News
News September 17, 2025
யூடியூபில் போலி செய்திகளை தடுக்க லைசன்ஸ் முறை

யூடியூப்பில் வலம்வரும் செய்தி சேனல்களில் பல போலி செய்திகள் வெளியிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில், TV சேனல்களை போல யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் லைசன்ஸ் பெறுவதை கட்டாயமாக்கும் திட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் இதுபோன்ற விதிமுறை தேவையா? Comment பண்ணுங்க.
News September 17, 2025
பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் யார் யார்?

இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்க மத்திய அரசிடம் EPS கோரிக்கை வைத்துள்ளார். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 53 பேருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் சி.வி.ராமன் தொடங்கி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 9 தமிழர்கள் பாரத ரத்னா விருதை பெற்றுள்ளனர். மற்றவர்கள் யார் யார் என்பதை மேலே SWIPE செய்து பாருங்கள்
News September 17, 2025
நெட்பிளிக்ஸில் மீண்டும் குட் பேட் அக்லி? ரெடியா மாமே

நெட்பிளிக்ஸ் தளத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் மீண்டும் இடம்பெறவுள்ளது. உரிய அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்களை படத்தில் பயன்படுத்த கோர்ட் தடை விதித்தது. இந்நிலையில், அஜித் படங்களின் பழைய மாஸான பாடல்களை மிக்ஸிங் செய்து பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் ‘குட் பேட் அக்லி’ நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.