News April 4, 2024
BREAKING: வீடு வீடாக வருகிறார்கள்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர் . ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 – மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8ஆம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
Similar News
News February 17, 2026
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை: திருமா

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் விசிக உறுதியாக இருப்பதாக திருமா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கி விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்புவதன் மூலம் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; அதேநேரம் கைவிடவும் இல்லை என்றார்.
News February 17, 2026
DMK அரசுக்கு எதிராக பிப்.21-ல் BJP போராட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாக நயினார் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை தடுக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொள்கைகளை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் பிப்.21-ல் TN முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
News February 17, 2026
டிகிரி போதும்.. ₹48,480 வரை சம்பளம்!

SBI வங்கியில் 2,050 Circle Based Officers (CBO) காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * பிப்.25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


