News October 3, 2025
BREAKING: நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலுள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மர்மநபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மிரட்டலை அடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 3, 2025
பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

2025-26 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், <<17895876>>RTE <<>>திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும். எனவே, தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணங்களை 7 நாளுக்குள் மீண்டும் திருப்ப ஒப்படைக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.
News October 3, 2025
RECIPE: சுவையான ராகி புட்டு!

ராகி புட்டு மிகவும் சுவையானது மட்டுமின்றி ஹெல்தியானது கூட. செய்வதும் மிகவும் எளியது *ராகி மாவில் உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும் *பொடிப்போல உருட்டி புட்டுக்குண்டில் அடுக்கவும் *இந்த மாவை, ஆவியில் 10 நிமிடம் வேகவைக்கவும் *பிறகு, ஆறவைத்து வெல்லம் அல்லது சர்க்கரை தூவி சூடாக பரிமாறலாம் *வாழைப்பழம், நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். SHARE.
News October 3, 2025
காழ்ப்புணர்ச்சியுடன் பேசும் கவர்னர்: வைகோ

திமுக அரசின் மீது, கவர்னர் RN ரவி காழ்ப்புணர்ச்சியுடன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என <<17900119>>கவர்னர் விமர்சிந்திருந்த <<>>நிலையில் அதற்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். பழங்குடியினர், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.