News April 16, 2025
BREAKING: காலையிலேயே குலுங்கிய தலைநகரம்!

டெல்லி-NCR பகுதிகளில், இன்று காலையே வலுவான நடுக்கங்கள் உணரப்பட்டன. தேசிய நில அதிர்வு மையம் (NCS) படி, ரிக்டர் அளவில் 5.9 ஆக உணரப்பட்ட இந்த பூகம்பத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியமாகும். தற்போது வரை பெரிதாக சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து ஆசிய கண்டத்தின் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
நவம்பர் 27: வரலாற்றில் இன்று

*மாவீரர் நாள்.
*1895 – நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்த ஆல்ஃபிரட் நோபல், தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
*1940 – புரூஸ் லீ பிறந்தநாள்.
*1977 – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.
*1986 – சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்.
*2008 – முன்னாள் PM வி.பி.சிங் நினைவுநாள்.
News November 27, 2025
டெஸ்லாவின் முதல் முழுநேர சேவை மையம் தொடக்கம்

டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் முதல் முழுநேர விற்பனை மையத்தை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் கஸ்டமர்கள் ஆலோசனைகள், புக்கிங், டெஸ்ட் டிரைவ் சேவைகளை பெறலாம். முன்னதாக, மும்பை மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்ட மையங்கள் காட்சிப்படுத்துதல் மையங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் தனது 2 ‘Y’ வேரியண்ட் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
News November 27, 2025
57 வயதில் இரட்டை குட்டி போட்ட அனார்கலி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வு கவனத்தை ஈர்த்து வருகிறது. 57 வயதான அனார்கலி என்ற யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. 2 குட்டிகளும், 3 மணிநேர இடைவெளியில் பிறந்துள்ளன. மேலே, இரட்டை குட்டிகளுடன் அனார்கலி இருக்கும் போட்டோக்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


