News October 13, 2025
சிறப்பு TET தேர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3 சிறப்பு TET தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. 2026-ல் ஜனவரி, ஜூலை, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு ஆசிரியர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என SC உத்தரவிட்டதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News October 13, 2025
நீடா அம்பானியின் bag-ன் விலை ₹15 கோடியா!

ஒரு கோடி சம்பாதிப்பதே பலரின் வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால், நம்.1 பணக்காரரான முகேஷ் அம்பானி மனைவிக்கு அதெல்லாம் சாதாரணம் தானே. ஆம், அண்மையில் ஒரு பார்ட்டிக்கு அவர் எடுத்துச் சென்ற Hermès Birkin ஸ்பெஷல் எடிஷன் மினி பேகின் விலை ₹15 கோடியாம். முதலை தோல் லுக்கில் உள்ள இந்த பேக் மீது 18k ஒயிட் கோல்டு பூச்சுடன், 3,025 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
News October 13, 2025
ஆண்களை மட்டுமே விடுவித்த ஹமாஸ்

2 ஆண்டுகளாக பணயக் கைதிகளாக இருந்த 20 பேரை இன்று ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. நீண்ட காலத்துக்கு பின் குடும்பத்தினருடன் அவர்கள் இணைந்தது உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்தது. இந்நிலையில், பணயக் கைதிகளாக உயிருடன் இருந்தவர்கள் எல்லோரையும் ஒப்படைத்து விட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஆனால், இவர்களில் யாருமே பெண்கள் இல்லை. இதனால், பெண்களை கொன்றுவிட்டனரா (அ) ஒளித்து வைத்துள்ளனரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
News October 13, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா…?

திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், 3 நாள்கள்(அக்.18,19,20) தொடர் விடுமுறையாகும். ஆனால், ஊர்களுக்குச் செல்லும் பலரும் தீபாவளி அன்றே புறப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதனால், தீபாவளிக்கு அடுத்த நாள்(அக்.21) விடுமுறை அளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் புக் செய்ய வசதியாக இருக்கும் என கூறுகின்றனர். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது.