News September 28, 2025

BREAKING: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கரூரில் நேற்று அவரது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கட்சி தொண்டர்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். இதனால், அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 29, 2025

இந்தியாவிற்கு சுயமரியாதை உள்ளது: ரஷ்யா

image

எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையும், சுயமரியாதையும் இந்தியாவிற்கு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியா எடுக்கும் முடிவில் அமெரிக்கா தலையிடுவதற்கு உரிமை இல்லை எனவும், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ரஷ்யா எப்போதும் மதிப்பளிப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளது.

News September 29, 2025

படுமோசமாக சொதப்பிய சூர்யா

image

ஆசிய கோப்பை ஃபைனலில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், வெறும் ஒரு ரன்னில் அவுட் ஆகியுள்ளார். இந்த தொடர் முழுவதுமே அவர் தொடர்ந்து சொதப்பியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 72 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். குரூப் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 47 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

News September 28, 2025

ஷாக் கொடுத்த அபிஷேக்..!

image

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ஃபைனலில், இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. எப்போதுமே இறங்கியதுமே அதிரடி காட்டும் அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் அவுட் ஆகி ஷாக் கொடுத்துள்ளார். அபிஷேக் 10 பந்துகளை எதிர்கொண்டாலே, 30-க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கும் வீரர் என்பதால், இது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 2 ஓவர்களில் இந்திய அணி 10/1 ரன்களை எடுத்துள்ளது.

error: Content is protected !!