News March 18, 2024
BREAKING: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு

பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காத நிலையில், அவருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். பொன்முடிக்கு தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என கூறி ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
Similar News
News December 9, 2025
இன்று முதல் டி20: வெற்றியை தொடருமா இந்தியா?

SA அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, இன்று கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமானது என்பதால், அதிக ஸ்கோர் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த மைதானத்தில் நடந்த SA-க்கு எதிரான 3 டி20-ல், 2-ல் இந்தியா தோற்றுள்ளது. டெஸ்ட்டில் SA-வும், ODI-ல் இந்தியாவும் வென்ற நிலையில், டி20-ல் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News December 9, 2025
சென்னை சர்வதேச திரைப்பட விழா அறிவிப்பு

23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 11 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 27 மொழிகளில் இருந்து 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் இருந்து பாட்ஷா, அலங்கு, வேம்பு, டூரிஸ்ட் ஃபேமிலி, 3 BHK, மாமன் உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக ராயப்பேட்டை PVR சத்யம் சினிமாஸ், சிட்டி செண்டர் INOX தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.
News December 9, 2025
RSS நிகழ்ச்சியில் பங்கேற்கும் சீமான்

சென்னையில் RSS நடத்தும் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழாவில், சீமான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்: தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு’ என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில், ‘பாரதி கண்ட வந்தே மாதரம்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் தேசியம் பேசும் சீமான், RSS நிகழ்ச்சியில் பேசுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


