News May 25, 2024

BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு

image

இன்னும் 10 நாள்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ₹14,000-லிருந்து ₹18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

image

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

News March 7, 2026

மகளிர் வங்கி கணக்கில் ₹15,000.. அதிரடியாக அறிவித்தார்

image

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய்மார்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணத்தின்போது பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டு சேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

News March 7, 2026

₹2,500 மகளிர் உரிமைத் தொகை.. விஜய் தேர்தல் வாக்குறுதி

image

தவெக சார்பில் நடைபெற்றுவரும் மகளிர் தின நிகழ்ச்சியில், பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதில், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித் தொகை ₹2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அரசு ஊழியர்களை தவிர மற்ற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் விஜய் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!