News October 25, 2025
BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News January 18, 2026
மாணவர்களுக்கு விடுமுறை.. கூடுதல் பஸ்கள் இயக்கம்

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சிரமமின்றி சென்னை திரும்ப ஏதுவாக இன்று 5,192 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக <
News January 18, 2026
சற்றுமுன்: விஜய் அறிவித்தார்

ஜனவரி 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TN மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு அறிக்கை தயாரிக்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திமுகவும், அதிமுகவும் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து வருவதால், விஜய்யும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
News January 18, 2026
திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: ரகுபதி

திமுக கூட்டணி உடையும் என்ற சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது என்றவர், காங்கிரஸ் தங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது எனவும் அனைவரையும் அரவணைப்பதே CM ஸ்டாலினின் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


