News March 28, 2025

BREAKING: நிலநடுக்கத்தால் பாங்காக்கில் அவசரநிலை

image

நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News March 31, 2025

பறவைகளுக்கு இதை பண்ணுங்க.. முதல்வரின் பாசக்கரம்…

image

கோடை காலம் வந்தால் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாது. நாமே அவ்வளவு அவதிப்படும் போது பறவைகள் என்ன செய்யும். இந்நிலையில், கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கையில் செல்லப் பிராணியுடன் பறவைகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்களையும் CM பகிர்ந்துள்ளார்

News March 31, 2025

46 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில் நாளை முதல் 46 சுங்கச்சாவடிகளில் 2.5%- 2.7% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதில் 8 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை. எஞ்சிய 38 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளவை. புதிய கட்டண உயர்வின்படி, கார்களுக்கான கட்டணம் ரூ.5, பஸ்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15- ரூ.30 வரை அதிகரிக்கிறது. நெமிலி, சின்னசமுத்திரம் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படாது.

News March 31, 2025

காய்கறிகள் விலை சரிவு

image

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.13 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை ரூ.14 முதல் ரூ.20 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ.5க்கும், பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!