News August 7, 2025

BREAKING: மாநில கல்வி கொள்கை நாளை வெளியீடு

image

தமிழ்நாட்டிற்கான மாநில கல்வி கொள்கையை CM ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை CM-யிடம் சமர்ப்பித்தது. அதில் 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழங்கியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நாளை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை CM வெளியிட உள்ளார்.

Similar News

News March 5, 2026

நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

image

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.

News March 5, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

News March 5, 2026

தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

image

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.

error: Content is protected !!