News September 28, 2025
BREAKING: உயிரிழந்தோர் உடல்களுக்கு ஸ்டாலின் அஞ்சலி

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் உடல்கள் கரூர் மருத்துவமனையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவோடு இரவாக கரூர் சென்ற ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Similar News
News September 28, 2025
9-வது முறை கோப்பையை தூக்குமா இந்தியா?

ஆசிய கோப்பையின் பைனலில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதுவரை இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன. நடப்பு தொடரில் தோல்வியே பெறாத அணி என்ற பெருமையுடன் இந்தியா உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ஏற்ற இறக்கங்களுக்கு பிறகே பைனலுக்கு சென்றது. இந்தியாவுக்கே சாதகமான சூழல் இருந்தாலும், இலங்கையுடன் ஏற்பட்ட தடுமாற்றத்தை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
News September 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 472 ▶குறள்: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
News September 28, 2025
விஜய் வீட்டுக்கு முன் குவியும் தவெக தொண்டர்கள்

கரூர் ஹாஸ்பிடலில் விடிய விடிய கதறல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த துயரத்திற்கு மத்தியில் விஜய் சென்னை வந்தடைந்த நிலையில், அவரின் வீட்டு முன், தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஒருபுறம் போலீசார், மறுபுறம் தவெக தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தவெக முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வார்கள் என கூறப்படுகிறது.