News September 4, 2025
BREAKING: இலங்கை தமிழர்கள் இனி சட்டப்பூர்வமாக தங்கலாம்

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்து அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்கலாம். அண்மையில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்(INA) கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. TN-ல் சுமார் 80,000 பேர் அகதிகளாக உள்ளனர்.
Similar News
News September 7, 2025
₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
News September 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 451 ▶குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். ▶ பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
News September 7, 2025
USA உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு, USA 50% வரி விதித்ததில் இருந்தே இரு நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான கருத்துகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், USA உடனான நல்லுறவுக்கு PM மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக EAM ஜெய்சங்கர் கூறியுள்ளார். ட்ரம்ப் விஷயத்தில், மோடி எப்போதும் மிகச்சிறந்த தனிப்பட்ட நல்லுறவை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் என்று டிரம்ப் பேசியிருந்தார்.