News April 10, 2024
BREAKING: வானிலை மாறுகிறது .. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நாளை தென் தமிழகம், டெல்டா, அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்.13 முதல் 3 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News April 24, 2025
ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
News April 24, 2025
இந்தியா vs பாக். யார் வலிமை?

இந்தியா- பாக். இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், இருநாட்டு ராணுவ வலிமையை தெரிந்து கொள்ளலாம். *ராணுவ வீரர்கள்: 14,55,550 (இந்தியா), 6,54,000 (பாக்.) *அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்: 293 (இந்தியா), 121 (பாக்.) *போர் விமானங்கள்: 2,229 (இந்தியா), 1,399 (பாக்.) *துணை ராணுவப்படை வீரர்கள்: 25,27,000 (இந்தியா), 5,00,000 (பாக்.) *உலகில் வலிமையான ராணுவம்: இந்தியா 4-வது இடம், பாக். 12-வது இடம்.
News April 24, 2025
காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: அம்பானி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ஹாஸ்பிடலில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அம்பானி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ரிலையன்ஸ் குடும்பம் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.