News October 27, 2025
BREAKING: அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 27, 2025
தீவிர புயல்: நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

‘மொன்தா’ புயல் தீவிரமடைவதால், புதுச்சேரியின் ஏனாமில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால், நாளை விடுமுறை அளிக்க பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
News October 27, 2025
Cinema Roundup: ‘காந்தாரா’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

*VJ சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. *‘காந்தாரா: சாப்டர் 1’ படம் வரும் 31-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. *‘NEEK’ பட ஹீரோ பவிஷின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. *₹15 கோடி சம்பளம் கேட்பதாக வெளியான தகவலை மமிதா பைஜி மறுத்துள்ளார். *ஜாக்கிசானுடன் ஹிரித்திக் ரோஷன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்.
News October 27, 2025
தமிழகத்தில் SIR.. அதிமுக வரவேற்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(SIR) அதிமுக சார்பில் வரவேற்பு தெரிவிப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை மாநில அரசின் அலுவலர்கள்தான் மேற்கொள்வர் என்பதால், அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். SIR-க்கு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


