News April 26, 2025
BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்வு

தங்கம் விலை அதிகரித்தபோதிலும், வெள்ளி விலை கடந்த 2 வாரமாக மாறாமல் இருந்தது. 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.
Similar News
News November 24, 2025
மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா? வந்தது அப்டேட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால் விடுமுறை அளிக்காத மாவட்டங்களுக்கு மதியத்திற்குமேல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
சற்றுமுன்: புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்புரையின்போது விஜய் தாமதமாக வந்தாரா, பரப்புரை நடைபெற்ற இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டதா, சம்பவம் நடந்தபோது அங்கிருந்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
News November 24, 2025
இந்திய பெண் உளவாளியை கௌரவித்த ஃபிரான்ஸ்

2-ம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளுக்கு எதிராக உளவு பார்த்த, பிரிட்டிஷ் – இந்திய வம்சாவளி நூர் இனாயத் கானுக்கு தபால் தலை வெளியிட்டு ஃபிரான்ஸ் கவுரவித்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், ஃபிரான்ஸ் நினைவு அஞ்சல் தலையால் கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். நாஜி ஆக்கிரமிப்பு ஃபிரான்ஸில் ஊடுருவி உளவு பார்த்ததாக 1944-ம் ஆண்டில் அவர் தூக்கிலிடப்பட்டார்.


