News September 29, 2025
BREAKING: விஜய்க்கு பின்னடைவு

<<17862356>>தவெக <<>>மனுவை அவசர வழக்காக உடனே ஏற்க முடியாது என HC மதுரை கிளை பதிவாளர் மறுத்துவிட்டார். தவெக சார்பில் அளிக்கப்படும் மனு நாளை ஏற்கப்பட்டு, வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே, மக்களை நேரில் விஜய் சந்திக்காதது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில், HC-ம் இவ்வாறு கூறிவிட்டதால், வெள்ளிக்கிழமை வரை அவர் கரூர் செல்ல வாய்ப்பில்லை. இது விஜய் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News September 29, 2025
கரூர் துயரத்தில் நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

கரூர் துயரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் நிகழ்ச்சிகளின்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் வகுக்கப்படும் எனக் கூறிய அவர், அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகளை ஒதுக்கி வைத்து, மக்களுடைய நலனுக்காக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.
News September 29, 2025
தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கொடுக்கும் அரசு திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது ஸ்த்ரி சக்தி யோஜனா திட்டம். இதில் ₹5 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். பெண்கள் மட்டுமே நடத்தும் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் பெண்கள் SBI வங்கியை அணுகவும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 29, 2025
இந்த மெசேஜ் வருதா.. ஜாக்கிரதையா இருங்க!

டெக்னாலஜி வளர, வளர மோசடிகளும் அதிகரிக்கின்றன. ‘Delhivery’ ஏஜென்சி பெயரில் அதிரவைக்கும் மோசடி ஒன்று நடந்து வருவதாக எச்சரிக்கப்படுகிறது. பார்சல் டெலிவரி செய்ய முயற்சித்து அது மிஸ்ஸானதாகவும், 2-வது முறை டெலிவரி செய்ய இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க என மெசேஜ் வரும். அதில், அட்ரஸ் செக் செய்த பிறகு, ‘Retry delivery fee’ என ₹25 கேட்கின்றனர். பலரும் கட்டிய பிறகே, இது மோசடி என தெரியவந்துள்ளது. உஷாரா இருங்க!