News February 1, 2025

BREAKING: சென்செக்ஸ் மளமளவென உயர்வு

image

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாக இருக்கும் பட்ஜெட்டில் முதலீடுக்கு உகந்த பல அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு இன்று இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 980 புள்ளிகள் உயர்ந்து 77,739 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 324 புள்ளிகள் அதிகரித்து 23,574 புள்ளிகளாக வர்த்தகமானது.

Similar News

News March 3, 2026

குமரி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளலாம்.

News March 3, 2026

திமுகவா.. அதிமுகவா? கிருஷ்ணசாமி ஆலோசனை

image

2026 தேர்தல் தொடர்பாக மார்ச் 5-ம் தேதியன்று புதிய தமிழகம் கட்சி ஆலோசனை நடத்தவுள்ளது. 10+1 சீட்களை அதிமுக கூட்டணியில் கேட்டுள்ளதால் இழுபறி நீடிக்கிறதாம். அதேநேரம், திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 + 1 என திமுக ஆஃபர் அளிப்பதாகவும், இதுகுறித்தே மார்ச் 5-ல் ஆலோசனை நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து என்ன?

News March 3, 2026

வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

image

சம்மர் சீசனில், வாட்டி வதைக்கும் வியர்க்குருவை சமாளிக்க பலரும் வியர்க்குரு பவுடர்களை பயன்படுத்துகின்றனர். அந்த பவுடர்களில் menthol, camphor, zinc oxide போன்றவை இருக்க வேண்டும். இவற்றால், வியர்வை கொஞ்சம் உறிஞ்சப்படும். ஆனால், இந்த பவுடர் நிரந்தர நிவாரணம் அளிக்காது. ஆனால், இந்த பவுடரை அதிகமாக பயன்படுத்தினால், வியர்வை நாளங்களை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!